திருச்சி: தமிழர் தேசம் கட்சியின் சார்பில் வருகிற ஜனவரி 25-ந் தேதி திருச்சியில் முத்தரையர்களின் அரசியல் அதிகார மீட்பு மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு தொடர்பாக அக்கட்சியின் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நேற்று (புதன்கிழமை) திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. தமிழர் தேசம் கட்சியின் தலைவரும் வீர முத்தரையர் முன்னேற்ற சங்க நிறுவனத் தலைவருமான செல்வகுமார் தலைமை தாங்கினார். அப்போது பேசிய அவர், இந்த மாநாட்டில் வெற்றி பெற அனைவரும் சபதம் ஏற்போம் என பேசினார். மாநாட்டின் நோக்கம் முத்தரையர்களின் அரசியல் அதிகாரத்தை மீட்டெடுப்பதாகும்.