திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி: கடைகளில் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை இல்லாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் போஸ்டர் ஒட்டுவதற்கு பிரத்தியேக இடங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதை மீறி பொது இடங்களில், பள்ளி மற்றும் கல்லூரி சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டால் அவை அகற்றப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் ஆங்கில பெயர்பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. வணிகர்களை அழைத்து கூட்டம் நடத்தப்பட்டு, தமிழில் வைக்கப்படும் பெயர் பலகை ஆங்கிலத்தைக் காட்டிலும் பெரிதாக இருக்க வேண்டும் என எடுத்துக் கூறப்பட்டது. 15 நாள் நோட்டீஸ் காலம் வழங்கப்பட்டது. பல கடைகள் அதை அகற்றியுள்ளன.
அவ்வாறு பெயர் பலகை அகற்றப்படாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது கூடுதலாக 10 நாட்கள் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதையும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.