திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், புதுக்காட்டூர் பெட்ரோல் பங்க் பின்புறம் சந்தேகத்திற்கு இடமாக இருந்த இருவரை போலீசார் விசாரித்ததில், அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதை அடுத்து, அவர்களிடம் இருந்து எட்டு கிலோ 275 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், மலைப்பட்டி கீழத்தெருவைச் சேர்ந்த சுந்தர் மற்றும் மில்காலணி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுரேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.