திருச்சி நவல்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குண்டூர் குளம் அருகே 70 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று இருப்பதாக கிராம நிர்வாக அலுவலர் வெற்றிச்சிவன் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற நவல்பட்டு போலீசார் அடையாளம் தெரியாத முதியவர் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் உயிரிழந்த முதியவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.