திருச்சி உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம்

263பார்த்தது
திருச்சி உறையூர் பஞ்சவர்ண ஸ்வாமி திருக்கோவிலில் வைகாசி திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் காந்திமதி அம்மை பஞ்சவர்ண ஸ்வாமி சமேதராக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். அதைத் தொடர்ந்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டு, கைலை வாக்கியங்கள் முழங்க பெருந்திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி