திருச்சியில் செல்போன் திருடிய இளம் பெண் கைது

71பார்த்தது
திருச்சியில் செல்போன் திருடிய இளம் பெண் கைது
திருச்சி பொன்மலை அடிவாரம் மதுரை வீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன் இவர் ஏப்ரல் 14ஆம் தேதி காலை தனது மனைவியுடன் உறையூர் வெக்காளியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார் அப்போது அவரது மனைவியின் கைப்பையில் உள்ள செல்போன் மற்றும் பணத்தை அருகில் உள்ள பெண் திருடி சென்றார்.

உடனே அருகில் உள்ளவர்கள் கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர் இது குறித்து உறையூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து சிவகங்கை மாவட்டம் சிறுவயல் காந்தி நகரை சேர்ந்த லட்சுமி 32 என்பவரை கைது செய்தனர் மேலும் அவரிடம் இருந்து செல்போன் மற்றும் 1100 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.