திருச்சி கே. சாத்தனூர் கலிங்க நகர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாலகிருஷ்ணன் (42), ரயில்வே கேட் அருகே தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு கழிவறைக்குச் சென்றபோது, ஆட்டோவில் இருந்த இரண்டு பேட்டரிகள் திருடு போனது. இதுகுறித்து கே. கே. நகர் குற்றப் பிரிவில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா நகரைச் சேர்ந்த சஞ்சய் (20) என்ற வாலிபரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து திருடு போன ஒரு பேட்டரியும் மீட்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.