
திருச்சி: போதை மாத்திரைகள் விற்ற 3 இளைஞா்கள் கைது
திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீஸார், புத்தூா் வண்ணாரப்பேட்டை டோபி காலனியில் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த ரிஷிகேஷ் (19), ஹரிஹரசுதன் (20), சதாசிவம் (20) ஆகியோரை பிடித்து விசாரித்ததில், அவர்கள் போதை மாத்திரைகள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து போதை மாத்திரைகள், போதை ஊசிகள், சலைன் பாட்டில், இரு கைப்பேசிகள், 2 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனர்.







































