திருச்சி டிராக்டர் மோதி 70 ஆடுகள் பலி

1206பார்த்தது
திருச்சி மாவட்டம் தச்சங்குறிச்சியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் தனது 250 ஆடுகளை நெய்குளம் கிராமத்தில் மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றபோது, கரும்பு ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டர் ஒன்று ஆட்டு மந்தைக்குள் புகுந்தது. இதில் உடல் நசுங்கி 70 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. மேலும் 20 ஆடுகள் பலத்த காயமடைந்தன. போதையில் டிராக்டரை ஓட்டி வந்த ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி