திருச்சி: இருசக்கர வாகனத்தை திருட முயன்ற மர்ம நபர் கைது

772பார்த்தது
திருச்சி: இருசக்கர வாகனத்தை திருட முயன்ற மர்ம நபர் கைது
திருச்சி மருதாண்டக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பாண்டி முத்துராஜா சமயபுரம் கோவிலுக்கு அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றார். திரும்பி வந்தபோது, புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் அவரது வாகனத்தை திருட முயன்றதை கண்டார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் திருடனைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், தேவராஜ் திருட முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி