துறையூர்: அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கை

1086பார்த்தது
துறையூர் வட்டாரக் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பாக, அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மையப் பணிகளுக்கு 5ஜி செல் போன் மற்றும் 5ஜி சிம் கார்டு வழங்க வேண்டும், அந்தந்த கிராமத்தின் நெட்வொர்க்கிற்கு ஏற்ப சிம் கார்டு வழங்க வேண்டும்.

அங்கன்வாடி மையத்திற்கு வை-பை இணைப்பு வழங்க வேண்டும், பயனாளிகளுக்கு சத்துமாவு வழங்குவதற்கு முகப்பதிவு போட்டோ முறையை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி