திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள நல்லியம்பாளையம் கைலாசநாதர் ஆலயத்தில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக பால், தயிர், திருமஞ்சனம், மஞ்சள் கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து நடைபெற்ற அன்னாபிஷேகத்தில் இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்து சென்றனர். இந்த விழா ஐப்பசி மாத பௌர்ணமி அன்று நடைபெற்றது.