துறையூர் அண்ணா பேருந்து நிலையம் புதுப்பிப்பு பணிகள் காரணமாக, 5 கிலோமீட்டர் தொலைவில் தற்காலிக பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், வெளியூர் செல்ல வந்த பெண் ஒருவர் கடும் வெயிலில் நீண்ட நேரம் நின்றதால் திடீரென மயங்கி விழுந்தார். துணை சபாநாயகர் ரவிசங்கர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு பணிமனை அதிகாரி உதயகுமாரிடம் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.