திருச்சியில் மாணவிகளுக்கான அஸ்மிதா தடகளத் தொடர் போட்டி

1பார்த்தது
திருச்சியில் மாணவிகளுக்கான அஸ்மிதா தடகளத் தொடர் போட்டி
திருச்சிராப்பள்ளி அண்ணா விளையாட்டு மைதானத்தில் இந்திய தடகள சம்மேளனம், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட தடகள சங்கம் இணைந்து 14, 16 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான அஸ்மிதா (வீரமங்கை) தடகளப் போட்டியை இன்று சனிக்கிழமை (22.11.25) நடத்தியது. மாவட்ட தடகள சங்க செயலாளர் டி. ராஜு தலைமையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 60 மீ, 600மீ ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
Job Suitcase

Jobs near you