திருச்சி அருகே சாலையில் தீப்பற்றி எரிந்த கார்

2பார்த்தது
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், நம்பர் ஒன் டோல்கேட் அருகே நேற்று இரவு ஒரு கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. காரில் இருந்து புகை வந்ததும், அதில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறி தப்பித்துவிட்டனர். பின்னர், தீ மளமளவென பரவி காரை முழுவதுமாக சேதப்படுத்தியது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி