நேற்று மாலை திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கல்லுப்பட்டி அருகே, சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த வேல்முருகன் தனது நண்பர்களுடன் சபரிமலை சென்று திரும்பும்போது, மழையால் கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த அனைவரும் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.