திருச்சியில் குட்கா விற்றவர் மீது வழக்கு

67பார்த்தது
திருச்சியில் குட்கா விற்றவர் மீது வழக்கு
திருச்சி ஏர்போர்ட் போலீசார் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஏர்போர்ட் பகுதி சிலிக்கான் கோவில் தெருவில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நடமாடிக் கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் குமார் என்பவரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த 300 கிராம் போதைப் புகையிலையை கண்டறிந்தனர். உடனே புகையிலையை பறிமுதல் செய்து அவர் மீது வழக்குப் பதிந்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி