துறையூர் அருகே நாகநல்லூரைச் சேர்ந்த குமரவேல் என்பவர் தனது வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம் நள்ளிரவில் திருடு போனது. இதுகுறித்து அவர் உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவத்தன்று இரவு குமரவேல் தனது இருசக்கர வாகனத்தை வீட்டிற்கு வெளியே நிறுத்தி இருந்தார். காலையில் பார்த்தபோது அது காணாமல் போனது தெரியவந்தது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் பைக்கை திருடிச் சென்றது பதிவாகி இருந்தது. இதன் அடிப்படையில், போலீசார் மர்மநபரைத் தேடி வருகின்றனர்.