திருச்சி: 22 சவரன் நகை திருடிய சமையல்காரர் கைது

977பார்த்தது
திருச்சி: 22 சவரன் நகை திருடிய சமையல்காரர் கைது
திருச்சி பாலக்கரை இரட்டை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த ஜோசப் இருதயராஜ் வீட்டில் பீரோவில் இருந்த 22 சவரன் நகை காணாமல் போனது. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். திருமண நிகழ்வுக்கு சமையல் பணிக்காக வந்த ராமநாதபுரம் மாவட்டம் முல்லை நகரைச் சேர்ந்த உசேன் என்பவர் நகையைத் திருடியது தெரியவந்தது. நெல்லையில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி