திருச்சியில் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை

68பார்த்தது
திருச்சியில் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை
திருச்சி மாவட்டம் மருங்காபுரி அருகே உள்ள முருங்கபட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி மகள் காயத்ரி இவர் திருச்சியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்து அங்குள்ள அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிஎஸ்சி படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி அன்று நீண்ட நேரம் மொபைல் போனை பேசி கொண்டிருந்ததாக உறவினர் காயத்ரியை கண்டித்ததாகப் போடப்படுகிறது. இதைத்தொடர்ந்து காயத்ரி தன் அறையில் மயங்கி கிடந்துள்ளார். இதை அடுத்து அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தது தெரிய வந்தது. திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி