துறையூர் அருகே உள்ள வைரிசெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி தவமணி, இன்று காலை மருத்துவ பரிசோதனை முடிந்து பேருந்து நிலையத்தில் சாலையை கடக்க முயன்றபோது, அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானார். பேருந்தின் முன் சக்கரம் அவர் மீது ஏறியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.