துறையூர்: ரத்தக் காயங்களுடன் சடலமாக கிடந்த விவசாயி

79பார்த்தது
துறையூர்: ரத்தக் காயங்களுடன் சடலமாக கிடந்த விவசாயி
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் வயது 51. நேற்று (ஜூன் 10) காலை 9 மணி அளவில் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதைத்தொடர்ந்து குடும்பத்தினர் அவரைத் தேடி வந்தனர். இன்று (ஜூன் 11) காலை 9 மணி அளவில் நரசிங்கபுரம் கிராமத்திலிருந்து காணப்பாடி செல்லும் சாலையில் உடல் முழுவதும் ரத்தக் காயங்களுடன் சுரேஷ்குமார் சடலமாக கிடந்தார். 

இது தொடர்பாக தகவல் கிடைத்ததன் பேரில் துறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விவசாயி சுரேஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்த போலீசார் சுரேஷ்குமாரை யாரும் அடித்துக் கொலை செய்தார்களா அல்லது வேறு ஏதேனும் விபரீதம் நடைபெற்றதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விவசாயி ரத்தக் காயங்களுடன் சடலமாக கிடந்த சம்பவம் நரசிங்கபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.