மணப்பாறை: வழிப்பறியில் ஈடுபட முயன்ற ஐந்து பேர் கைது

84பார்த்தது
மணப்பாறை: வழிப்பறியில் ஈடுபட முயன்ற ஐந்து பேர் கைது
மணப்பாறை அருகே குளித்தலை செல்லும் சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த கரூர் மாவட்டம் தேவர்மலை பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார் மற்றும் அவருடைய நண்பர்கள் மணப்பாறை அருகே உள்ள கரும்புள்ளி பட்டியைச் சேர்ந்த சந்துரு, தினேஷ், ஸ்டாலின், நாகராஜ் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் அவ்வழியாக வாகனத்தில் செல்பவர்களை நடந்து செல்பவர்கள் மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மணப்பாறை போலீசார் வழக்குப் பதிவு செய்து ஐந்து பேரையும் கைது செய்து மணப்பாறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி