துறையூர் அருகே உள்ள தென்திருப்பதி என்று அழைக்கப்படும் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவில் தேர் திருவிழா வரும் ஜூன் ஒன்பதாம் தேதி அன்று நடைபெற உள்ளது. நாளை முதல் தினமும் ஒரு வாகனத்தில் பிரசன்ன வெங்கடாஜலபதி எழுந்தருளி பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் காட்சியளிப்பார். திருத்தேர்விழா நிகழ்வுக்கான கொடியேற்ற நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.