திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி மண்டலம் 3ல் உள்ள 13 வார்டுகளில் பணிபுரியும் 559 தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று திங்கட்கிழமை இரவு தொடங்கி வைத்தார். அவர் தூய்மைப் பணியில் ஈடுபட்ட 50 பணியாளர்களுக்கு உணவுகளை வழங்கி அவர்களுடன் கலந்துரையாடினார்.