திருச்சி விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து விமானம் ஒன்று வந்து தரை இறங்கியது. அந்த விமானத்தில் பயணித்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது இரண்டு பயணிகள் தங்கள் உடமைகளில் வெளிநாட்டு கரன்சிகளை மறைத்து எடுத்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து இருவரிடமிருந்தும் கரன்சிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த கரன்சிகளின் மதிப்பு 38 லட்சம் என கூறப்படுகிறது.