திருச்சி விமான நிலையத்தில் பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், விசிக தலைவர் தொல் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் ராஜ்யசபா உறுப்பினர் திருச்சி சிவா ஆகியோர் இன்று எதிர்பாராத விதமாக சந்தித்துக் கொண்டனர். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை திருச்சி சிவா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.