முசிறி அரசு கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள், யுஜிசி நிர்ணயித்த 57,800 ஊதியம், 12 மாத சம்பளம், ஓய்வு பெற்ற விரிவுரையாளர்களுக்கு 25 லட்சம் பணிக்கொடை, பெண் விரிவுரையாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.