திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே அயினாட்டி கிராமத்தில் குடும்பப் பிரச்சனை காரணமாக கணவர் பொன்னார், தனது மனைவி லாவண்யாவை அறிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. தடுக்க வந்த லாவண்யாவின் உறவினர்களான சரண்யா, கன்னியம்மாள் ஆகியோரையும் பொன்னார் தாக்கியுள்ளார். காயமடைந்த மூவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக பொன்னாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.