திருச்சி ரயில்வே ஜங்ஷனில், ரயில்வே பாதுகாப்பு படையினர் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்களுடன் மோப்பநாய் உதவியுடன் நடைமேடை, பார்சல் சர்வீஸ் மற்றும் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினர். வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சா மற்றும் போதை பொருட்கள் வருவதை தடுக்கும் நோக்கில் இந்த சோதனை நடைபெற்றதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.