திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள நாகநல்லூர் கிராமத்தில் இன்று முதலாம் ஆண்டு ஜல்லிக்கட்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திருச்சி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 600 காளைகளும் 250 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். மாடுகளுடன் மல்லுக்கட்டி வெற்றி பெற்ற வீரர்களுக்கும், வீரர்களை வெற்றி கொண்ட காளைகளுக்கும் உடனடியாக பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டிக்கான பாதுகாப்பு பணியை உப்பிலியபுரம் போலீசார் மேற்கொண்டிருந்தனர்.