திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் முத்துராஜா தெருவில் வசிக்கும் 70 வயது மூதாட்டி கிருஷ்ணவேணி என்பவரின் வீட்டில் நேற்று மதியம் திடீரென தீப்பற்றியது. அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றும், தீ வேகமாக பரவி கூரை வீட்டின் மேல் பகுதியை எரித்து சாம்பலாக்கியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து காட்டுப்புத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.