திருச்சி: ஏர்போர்ட்டிற்கு போலி பாஸ்போர்ட்டில் வந்த நபர்

69பார்த்தது
திருச்சி: ஏர்போர்ட்டிற்கு போலி பாஸ்போர்ட்டில் வந்த நபர்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் முகமது நியாஸ். இவர் நேற்று முன்தினம் மலேசியாவில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தார். திருச்சி விமான நிலையத்தில் இமிகிரேஷன் அதிகாரிகள் நடத்திய சோதனையில் முகமது நியாஸ் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து தனது பெயர், தந்தை பெயர், தாயின் பெயர் மற்றும் தனது மனைவியின் பெயர் ஆகியவற்றை மாற்றிக் கொடுத்து போலி பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது. இதுகுறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்குப் பதிந்து முகமது நியாஸை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி