திருச்சி: எம்பிபிஎஸ் மாணவர் தூக்கிட்டு தற்கொலை

61பார்த்தது
திருச்சி: எம்பிபிஎஸ் மாணவர் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி நவல்பட்டு அண்ணா நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ்வர் காரைக்காலிலாஸ தனியார் கல்லூரியில் மருத்துவம் பயின்று வருகிறார். கடந்த சில மாதங்களாக ராஜேஷ்வர் கல்லூரிக்குச் செல்லாமல் ஊரில் இருந்து வந்துள்ளார். இதுகுறித்துப் பெற்றோர் கேட்டபோது, தனக்குச் சரியாகப் படிப்பு வரவில்லை என கூறியுள்ளார். மேலும் படிப்பைப் பாதியில் நிறுத்தியதால் அவரது பெற்றோர்கள் திட்டியுள்ளனர். இதனால் ராஜேஷ்வர் மிகுந்த மனஅழுத்தத்துக்கு ஆளானார். ராஜேஷ்வர் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். மகன் பிணமாகத் தூக்கில் தொங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்து பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

தொடர்புடைய செய்தி