திருச்சி: 9 புதிய பேருந்து சேவை தொடங்கி வைத்த அமைச்சர் நேரு

75பார்த்தது
திருச்சி:  9 புதிய பேருந்து சேவை தொடங்கி வைத்த அமைச்சர் நேரு
திருச்சி (மேற்கு) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு வழித்தடங்களில் பிங்க் நிற 9 விடியல் பயண புதிய பேருந்து சேவையை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து நகராட்சி நிருவாகத் அமைச்சர் கே. என். நேரு இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் கே. என். நேரு பேருந்தில் சிறிது தூரம் பயணம் செய்தார்.இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சரவணன், மாநகர மேயர் அன்பழகன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் லிட். , கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குநர் பொன்முடி, திருச்சி மண்டல பொதுமேலாளர் சதீஷ்குமார், மத்திய மாவட்ட திமுக செயலாளர். வைரமணி, மாவட்ட பொருளாளர் துரைராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.