துறையூர் நகர 2-வது வார்டு பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் அவர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடையினை இன்று (மே 3) திறந்து வைத்தார்.
இவ்விழாவில் நகரச் செயலாளர், நகர் மன்ற துணை தலைவர், நகர்மன்ற தலைவர், நகர் உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், கழக முன்னோடிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.