துறையூர் அருகே வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்த ராமராஜின் மனைவி ரம்யா (30) இன்று அதிகாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ராமராஜ் அதிகாலை எழுந்து பார்த்தபோது மனைவியின் சடலத்தை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து உப்பிலியபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரம்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.