கரூர் நீலிமேட்டு தெருவைச் சேர்ந்த ராமசாமி, திருச்சியில் கொத்தனாராக வேலை செய்து வந்தார். குழுமணி காலனி பகுதியில் அவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.