திருச்சி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த இளங்குமரன் என்பவரின் தாய் வசந்தி, அடிக்கடி மகன் வீட்டில் தகராறு ஏற்பட்டு வீட்டை விட்டுச் செல்வது வழக்கம். கடந்த நான்காம் தேதி ஏற்பட்ட தகராறில் வீட்டை விட்டுச் சென்ற வசந்தி மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், கேகே நகர் காவல் நிலையத்தில் இளங்குமரன் அளித்த புகாரின் பேரில், போலீசார் மூதாட்டியை தீவிரமாக தேடி வருகின்றனர்.