துறையூர் கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

64பார்த்தது
துறையூர் கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
துறையூர், நல்லியம்பாளையம் ஊரில் அமைந்துள்ள ஸ்ரீ கைலாசநாயகி உடனுறை ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் வைகாசி மாத மஹா பிரதோஷ விழா மாலை நான்கு மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றது. முன்னதாக மூலவர் ஸ்ரீ கைலாசநாதருக்கும் எதிர் திசையில் அமைந்துள்ள நந்திக்கும் பன்னீர், இளநீர், பால், சந்தனம், தயிர், பஞ்சாமிர்தம், தேன், அரிசிமாவு, திருமஞ்சனம், மஞ்சள்தூள், மலர்கள் ஆகிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. 

அபிஷேகத்தைத் தொடர்ந்து மூலவரான ஸ்ரீ கைலாசநாதர் மற்றும் நந்திக்கு பூமாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பஞ்சமுக தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கோவிலில் அமைந்திருக்கும் பரிவார தெய்வங்களான ஸ்ரீ கைலாசநாயகி, கணபதி, முருகன், முப்பெரும் தேவியர், காலபைரவர், சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள், 18 சித்தர்கள், மாரியம்மன், அய்யனார் ஆகிய தெய்வங்களுக்கும் பூமாலைகள் அணிவிக்கப்பட்டு பொங்கல் தேங்காய் வாழைப்பழம் ஆகியவை கொண்டு பூஜிக்கப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து ஸ்ரீ கைலாசநாயகி ஸ்ரீ கைலாசநாதர் ஆகிய தெய்வங்களின் உற்சவர் திருவீதி உலா காளை வாகனத்தில் நடைபெற்றது. கோவிலின் உற்பிரகாரத்தில் மூன்று முறை உற்சவர் அம்பாளுடன் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

தொடர்புடைய செய்தி