தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில், திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த சரவணன் மாற்றப்பட்டு, புதிய ஆட்சியராக பிரதிக் தயால் நியமிக்கப்பட்டுள்ளார். இதை அடுத்து, பிரதிக் தயால் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியராகப்
பதவி ஏற்றுக்கொண்டார். இந்த இடமாற்றங்கள் நிர்வாக நலன் கருதி மேற்கொள்ளப்பட்டுள்ளன.