முசிறி சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ், முசிறி நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை தினக்கூலி மற்றும் ஒப்பந்த பணியாளர்கள், தங்களை நிரந்தர பணியாளர்களாக்க வேண்டும் என்றும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் கோரிக்கை மனுவை எம்எல்ஏவிடம் அளித்தனர். இந்த மனுவை முதல்வருக்கு அனுப்பி, உரிய நடவடிக்கை எடுப்பதாக எம்எல்ஏ விக்னேஷ் வாக்குறுதி அளித்தார்.