மதுரை மாநகராட்சி நகர விற்பனை குழு, 13.11.2025 அன்று ஆணையர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள சாலையோர வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்க தீர்மானித்தது. இதன்படி, மதுரைரோடு ஹோலி கிராஸ் கல்லூரி அருகில் உள்ள பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் கடைகள் மாற்றப்படும். இந்த பணிகள் 14.11.2025 அன்று மாலைக்குள் நிறைவடையும். மேலும், கீழ்கரை பகுதி காய்கறி கடைகள் காளியம்மன் கோவில் தெருவில் உள்ள மாநகராட்சி MLCP இடத்தில் மாற்றியமைக்கப்படும் என ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.