திருவெறும்பூர் அருகே வேங்கூர் ஊராட்சிக்கு உட்பட்ட தனியார் பள்ளியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நலம் காக்கும் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாமில் பொது மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, இதயவியல், கண், பல், மனநலம் உள்ளிட்ட 17 துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனை, பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான அறிவுரைகளை வழங்கினர்.