திருச்சி மாவட்டம் இருங்கலூரில் உள்ள தனியார் கல்லூரியில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு மாணவர் சபரி ஆனந்த் விடுதியில் தங்கி படித்து வந்தார். நேற்று அவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் மாணவரின் உடலைக் கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.