திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் தவெக வேட்பாளர் ரமேஷ் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தொண்டர்கள் ராஜகோபுரம் அருகே ஆட்டோவில் அதிவேகமாகச் சென்று பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாகவும், பட்டாசு வெடித்து இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.