திருச்சி: மாணவிகளுக்கு திருக்குறள் முகை விருது வழங்கி கௌரவிப்பு

881பார்த்தது
திருச்சி: மாணவிகளுக்கு திருக்குறள் முகை விருது வழங்கி கௌரவிப்பு
துறையூர் உப்பிலியபுரம் ஒன்றிய ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி த.பாதர்பேட்டையில், 13 மாணவிகளுக்கு திருக்குறள் முகை விருது வழங்கப்பட்டது. உலகப் பொதுமறை நூலான திருக்குறளில், ஒவ்வொரு அதிகாரத்திற்கும் ஒரு கதை எழுதிய இவர்களின் படைப்பாற்றல் மற்றும் கற்பனைத் திறனை மேம்படுத்தும் விதமாக இந்த நிகழ்வு நடைபெற்றது. மாணவர்கள் எழுதிய திருக்குறள் கதைகள் 'அறமே வரம்' என்ற தொகுப்பு நூலாக வெளிவந்துள்ளது. இவர்களின் திறமையைப் பாராட்டி, விருதுடன் சான்றிதழ், கேடயம் மற்றும் மெடல் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி