திருவரம்பூர்: குற்றங்களை தடுக்க 120 சிசிடிவி கேமரா பொருத்தம்

63பார்த்தது
திருவரம்பூர்: குற்றங்களை தடுக்க 120 சிசிடிவி கேமரா பொருத்தம்
திருவரம்பூர் பகுதியில் நடைபெறும் குற்றங்களைத் தடுக்க மெயின் ரோட்டில் 90 கண்காணிப்பு கேமராக்களும் கிராமப் பகுதியில் 30 கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு பொதுமக்களின் பாதுகாப்பு கண்காணிக்கப்படுவதாக இன்ஸ்பெக்டர் கருணாகரன் கூறினார். 

மேலும் இது பற்றி அவர் கூறும்போது பொதுவெளியில் ஒரு சம்பவம் நடந்து அதன்பின் நாங்கள் நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு நிவாரணம் செய்வதற்கு முன் அந்தக் குற்றம் நிகழாமல் தடுப்பதே எங்களது முதல் வேலை. அதற்காகத்தான் இவ்வளவு கேமராக்கள் பொருத்தப்பட்டு பொதுமக்களின் பாதுகாப்பு கண்காணிக்கப்படுகிறது என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி