துறையூர் அருகே கொட்டையூர், கருப்பம்பட்டி, திருமானூர் கிராமங்களை இணைக்கும் 6.50 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் பூமி பூஜையைத் தொடங்கி வைத்தார். மேலும், இந்த நிகழ்வில் முன்னாள் மாவட்ட சேர்மன் தர்மன் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, வீரபத்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.