துறையூர்: உழவர் நலத்துறை திட்டம் துவக்கம்

67பார்த்தது
துறையூர்: உழவர் நலத்துறை திட்டம் துவக்கம்
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டாரம் கொல்லப்பட்டி கிராமத்தில் துறையூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வீரமணி தலைமையில் உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்டம் நடைபெற்றது. இத்திட்டத்திற்கு வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை, வேளாண் அறிவியல் நிலையம், சிறுகமணி விதை சான்று துறை, கால்நடைத்துறை, மீன்வளத்துறை, கூட்டுறவுத்துறை ஆகிய அனைத்து துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டு துறை திட்டங்கள் மற்றும் தொழில்நுட்ப கருத்துகளை வழங்கினார்கள். 

வேளாண்மை துறை சார்பாக கோடை உழவு செய்தல், மண் பரிசோதனை செய்தல், உயிர் உரங்கள் இடுதல், ஜிங் சல்பேட் மானிய விலையில் வழங்குதல், நிலக்கடலை பயிருக்கு ஜிப்சம் இடுதல் ஆகிய தொழில்நுட்பங்களை வழங்கினார்கள். வேளாண் பொறியியல் துறை மூலமாக வாடகை இயந்திரங்கள் ஒரு மணி நேரத்திற்கு உழவு செய்வதற்கு ரூ. 500 மட்டுமே. மானியத்தில் பவர் வீடர், பவர் டில்லர், ரோட்டாவேட்டர் போன்ற வேளாண் இயந்திரங்களை பெறுவதற்கான ஆலோசனைகளையும், உழவன் செயலி மூலம் விவசாயிகள் பதிவு செய்தல் குறித்தும் எடுத்து கூறினார்கள்.

தொடர்புடைய செய்தி